UPDATED : அக் 23, 2026 01:53 AM
ADDED : அக் 23, 2026 01:49 AM
திருப்பூர்: கைது செய்யப்பட்ட தாராபுரம் தொகுதி ‘நாம் தமிழர்’ கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு தாராபுரம் கோர்ட் ஜாமின் வழங்கியது.அக்., 4ம் தேதி, தாராபுரத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசார ஊர்வலத்தின் போது, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் தேர்தல் விதிகளை மீறியதாக கூறி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டார்.
அவரது கணவர் முருக சந்திரகுமார் மற்றும் கட்சித் தொண்டர்கள் உட்பட, 12 பேர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகா உள்ளிட்டோருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. நேற்று, தாராபுரம் கோர்ட்டில் ஜாமின் கேட்டு, கார்த்திகா தரப்பினர் மனு தாக்கல் செய்த நிலையில் இரு தரப்பு வாதங்கள் நடந்தன. பிறகு, கார்த்திகா, அவரது கணவர் உட்பட 9 பேருக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். எஞ்சிய, 3 பேரின் ஜாமின் மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.
