ADDED : டிச 07, 2025 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை:
தமிழக மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்; சிறந்த பேச்சாளரான நாஞ்சில் சம்பத், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்கிறேன். அவர் த.வெ.க., பிரசார செயலராக நியமிக்கப்படுகிறார். பொதுச்செயலர் ஆனந்த் உடன் இணைந்து, தன் பணிகளை மேற்கொள்வார். த.வெ.க., நிர்வாகிகளும் தொண்டர்களும், அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

