ADDED : பிப் 27, 2024 11:56 PM
பெரம்பலுார்:மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட, தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்க மாநில பொதுச்செயலர் சிவகுமார், பா.ஜ.,வில் இணைந்தார்.
பெரம்பலுார் மாவட்டம், காரை மலையப்ப நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 44. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்க மாநில பொதுச்செயலராக உள்ளார். தி.மு.க., மலையப்ப நகர் கிளை செயலராகவும் இருந்து வந்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்ட அவர், நேற்று தி.மு.க.,வில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.
அவர் கூறியதாவது:
நான், 26 ஆண்டுகளாக தி.மு.க.,வில் இருந்து வந்தேன். கிளை செயலராகவும் இருந்தேன். பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். மக்களுக்கு நல்ல பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவரின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டேன்.
பாரத பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவதற்காக தி.மு.க.,விலிருந்து விலகி, அவரது கட்சியில், பா.ஜ., மாவட்ட செயலர் முன்னிலையில் என் ஆதரவாளர்கள் 30 பேருடன் சேர்ந்துள்ளேன்.
விரைவில், நரிக்குறவர்கள் 2,000 பேரை மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் சேர்க்க உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

