கம்பத்தில் சிக்கிய தேசியக்கொடி தலைமை செயலகத்தில் பரபரப்பு
கம்பத்தில் சிக்கிய தேசியக்கொடி தலைமை செயலகத்தில் பரபரப்பு
ADDED : டிச 03, 2024 12:24 AM
சென்னை,தலைமை செயலக வளாகத்தில், பிரமாண்டமான கொடிக் கம்பத்தில், தினமும் தேசியக்கொடி ஏற்றப்படும். காலை ஏற்றப்படும் கொடி, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறக்கப்படும்.
கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை ராணுவ வீரர்கள் நேற்று மாலை இறக்கிய போது, திடீரென கம்பத்தில் சிக்கிக் கொண்டது. அதை கீழே இறக்க முடியாமல், ஒரு மணி நேரத்திற்கு மேலாக தவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உயர்ந்த கட்டடங்களில் தீயை அணைக்க பயன்படுத்தப்படும் வாகனத்தை பயன்படுத்தி, கம்பத்தில் சிக்கிய கொடியை எடுத்து விட்டனர்.
ஒரு வழியாக, கம்பத்தில் இருந்து தேசியக்கொடியை பாதுகாப்பாக இறக்கி இரவு 7:45 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தலைமை செயலக பாரம்பரிய கட்டடத்திற்கு, நேற்று நீல நிற மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் நீல நிறத்தில் ஜொலித்த கட்டடத்தை பலரும் பார்த்துச் சென்றனர்.