'ஹேவல்ஸ்' பிராண்ட் விளம்பர துாதர்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவன்
'ஹேவல்ஸ்' பிராண்ட் விளம்பர துாதர்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவன்
ADDED : மார் 22, 2025 05:52 AM

சென்னை : 'மின் சாதன பொருட்கள் உற்பத்தி துறையில் முன்னணி வகிக்கும், 'ஹேவல்ஸ்' நிறுவனத்தின் விளம்பர துாதர்களாக, நட்சத்திர ஜோடியான நயன்தாரா - விக்னேஷ் சிவன் இணைந்துள்ளனர்' என, அந்நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவு தலைவர் பராக் பட்நாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
'ஹேவல்ஸ்' நிறுவனம், மக்களுக்கு சிறந்த, தரமான தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
எங்கள் தயாரிப்புகளை, மக்களிடம் கொண்டு செல்ல, சரியான ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருப்பர்.
வசீகரம், படைப்பாற்றல், நம்பகத்தன்மை போன்றவற்றுடன் தனித்துவமாக உள்ளனர்.
அவர்களுடன் இணைந்திருப்பது, தென்னிந்தியாவில் எங்கள் வர்த்தகத்தை வளர்ச்சி அடையச் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹேவல்ஸ் இந்தி யாவின் பிராண்ட் மற்றும் மார்க்கெடிங் செயல் துணைத்தலைவர் ரோஹித் கபூர் கூறுகையில், “தென்னிந்தியா எங்களுக்கு முக்கியமான பகுதி.
''எங்களோடு இணைந்துள்ள ஜோடியின் செல்வாக்கு, இப்பகுதியில் எங்கள் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தவும், ஒவ்வொரு வீட்டிற்கும், உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை கொண்டு சேர்க்கவும் வழிவகுக்கும்,” என்றார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூறுகையில், 'புதுமை, தரம், நம்பிக்கைக்கு பெயர் பெற்ற, 'ஹேவல்ஸ்' பிராண்டுடன் இணைவது மகிழ்ச்சி. தென்னிந்திய மக்களிடம் மட்டுமின்றி, நாடு முழுதும் உள்ள பார்வையாளர்களிடம் ஹேவல்ஸ் தயாரிப்புகளை கொண்டு செல்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்' என்றனர்.