டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் சந்திப்பு
டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் சந்திப்பு
ADDED : டிச 13, 2025 06:47 PM

புதுடில்லி: டில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார்.
டில்லி சென்றுள்ள தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் பாஜ தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜ பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தெரிகிறது.
சந்திப்பு குறித்து நயினார் நகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கடந்த 32 நாட்களில் மாவட்டங்களில் நடைபெற்ற“தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” யாத்திரையின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி அமைச்சகத்தைச் சார்ந்த மனுக்களை வழங்கினேன்.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

