sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலர்

/

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலர்

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலர்

பிரசார மேடையில் செருப்பை காட்டிய நா.த.க., கொள்கை பரப்பு செயலர்

22


ADDED : ஜன 31, 2025 01:16 AM

Google News

ADDED : ஜன 31, 2025 01:16 AM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பிரசார பொதுகூட்டத்தில், நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலர், செருப்பை எடுத்து காட்டி எச்சரித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, குமலன்குட்டையில் நேற்று முன்தினம் இரவு பொது கூட்டம் நடந்தது.

இதில், அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, ''ஈ.வெ.ரா., இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் இருந்த, 60 பெண் புலவர்களை படிக்க வைத்தார். திருக்குறளை எழுதும்போது உடைந்த எழுத்தாணிக்கு பதில் புதிய எழுத்தாணியை கொடுத்து எழுத வைத்தார்.

''தொல்காப்பியம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, அகநானுாறு, புறநானுாறு தந்தவர்களை உருவாக்கினார் என்று யாராவது கூறினால், பிஞ்ச செருப்பை எடுத்து அடிப்பேன்,'' என, பேசியபடியே, தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி காட்டி, பேச்சை தொடர்ந்தார்.

மேடையில் செருப்பை எடுத்து காட்டியதுடன், 'அடிப்பேன்' என பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us