பெஞ்சல் புயலை எதிர்கொள்ள நாங்க ரெடி! களத்தில் இறங்கிய 11 பேரிடர் குழுக்கள்
பெஞ்சல் புயலை எதிர்கொள்ள நாங்க ரெடி! களத்தில் இறங்கிய 11 பேரிடர் குழுக்கள்
UPDATED : நவ 30, 2024 08:41 AM
ADDED : நவ 30, 2024 07:26 AM

சென்னை; தமிழகம், புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களும், புதுச்சேரியிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை பகுதிகளில், முகத்துவாரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்காலிகமாக இடம்மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மழை அதிகமாக பெய்யலாம் என்று கணிக்கப்பட்டுள்ள இடங்களில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
புயல் பாதிப்பில் இருந்து மக்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் மீட்புக்குழுவினர், அரசு அதிகாரிகள் முழு வீச்சில் இறங்கி உள்ளனர். இந்நிலையில், பெஞ்சல் புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 11 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை, கடலூர், நாகை, திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரியில் மீட்புக் குழுக்கள் களம் இறங்கி உள்ளன. அதி நவீன உபகரணங்களுடன் ஒவ்வொரு குழுவிலும் 30 வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரை மற்றும் அதிகம் மழை வரும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் மக்கள் நடமாட கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.