ADDED : டிச 17, 2024 07:54 PM
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும், சாலையில் கட்டப்படும் பாலத்திற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீர் திறந்துவிடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் பாலங்கள் கட்டப்படுகின்றன. ஆற்றுக்குள் உள்ள பாலங்கள் அதிக தண்ணீர் வருவதால் சேதமடைகின்றன. சமீபத்தில் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராதவிதமாக இதுபோன்று நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன.
2001 முதல் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுடன் பழகி வருகிறேன். எதிர்முகாமில் இருந்த காலத்திலும் திருமாவளவன் என்னுடன் சகோதர பாசத்துடன் பழகக்கூடியவர். விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கக்கூடாது என, நான் அழுத்தம் கொடுக்கவில்லை.
எனக்கோ தி.மு.க.,வுக்கோ, அப்படியொரு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. திருமாவளவன் இப்படிப்பட்ட அழுத்தத்துக்கெல்லாம் அடிபணிய மாட்டார்.
வேலு, பொதுப்பணித் துறை அமைச்சர்