ADDED : ஏப் 28, 2026 06:22 AM

சென்னை: சென்னையில் இருந்து மங்களூரு, திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை, ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே அறிவிப்பு: கர்நாடக மாநிலம், மங்களூரு சென்ட்ரலில் இருந்து திங்கட்கிழமைதோறும் மாலை 4:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:55 மணிக்கு சென்னை எழும்பூர் வரும்.
எழும்பூரில் இருந்து செவ்வாய்தோறும் மதியம் 2:00க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:00 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் அடையும். இந்த ரயிலும் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலியில் இருந்து, வியாழன், ஞாயிற்று கிழமைகளில், எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையும், வெள்ளி, திங்கள் கிழமைகளில் எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலும், ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே ராமேஸ்வரம் - மேட்டுப்பாளையம் இடையே, ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
