உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 12, 2026 01:38 AM

அ நிறம் | அளவு
சென்னை: முன்னாள் மாணவரின், 1 கோடி ரூபாய் நன்கொடையில், அண்ணா பல்கலையில் புதிதாக ஏ.ஐ., ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் இயங்கும், கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு இன்ஜினியரிங் துறையில், மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, 'வைதர்மா' எனும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆய்வகம் நேற்று திறக்கப்பட்டது.
கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரியில், 1990ம் ஆண்டு படித்த மாணவரும், கார்சன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் வைத்தியநாதன் வழங்கிய 1 கோடி ரூபாய் நன்கொடையில், இந்த ஏ.ஐ., ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது.
