உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 06, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
சென்னை: முன்னாள் படைவீரர்களுக்கான, மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த இணையதள செயலியை, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், இன்று (நவ.,6) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி, சென்னை நந்தனத்தில் நடந்தது. அமைச்சர் தொடக்கி வைத்த, இணையதள செயலி வழியே, முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தனர், தங்களின் படை ஆவண நகல்களை பதிவு செய்யவும், சுய விபரங்களை பதிவேற்றம் செய்யவும், தனித்திறன்களை தெரிவிக்கவும், ஊதிய விபரம் மற்றும் பணியாளர் நியமித்தல் உள்ளிட்ட பணிகளை எளிமையாக கையாளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
