தி.மலை கிரிவலப்பாதையில் ரூ.22 கோடியில் புதிய வசதிகள்
தி.மலை கிரிவலப்பாதையில் ரூ.22 கோடியில் புதிய வசதிகள்
ADDED : நவ 28, 2025 07:14 AM

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவலப்பாதை யில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த, 22.1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிக ளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை வாயிலாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், 22.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
சுகாதார வளாகம், பக்தர்கள் இளைப்பாறுதல் மண்டபம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
திருமலை திருப்பதியில் அமைந்துள்ள ராமானுஜ ஜீயர் மடத்தின் அறைகள் சீரமைக்கும் பணிகள், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருநெல்வேலி பாபநாச சுவாமி கோவிலில், பரிகார மண்டபம், பாபநாச தீர்த்தம், துணிகள் சேகரிப்பு மையம், பொருட்கள் வைப்பறை கட்டுதல், நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள், 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளன.
இவை உட்பட 25 கோவில்களில், 79.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இப்பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்தபடி, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியாண்டவர் பாலிடெக்னிக்கில், 2.46 கோடி ரூபாய் செலவில் இயந்திரவியல் ஆய்வகம்; மயிலாடுதுறை ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில், மூவலுார் மார்க்கசகாயேஸ்வரர் கோவில்.
திருசக்திமுற்றம் சக்தி வ னேஸ்வரர் கோவில், கள்ளக் குறிச்சி வடக்கனந்தல் உமாமகேஸ்வரர் கோவில் ஆகிய நான்கு கோவில்களில் அன்னதானக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றையும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் வெங்கடாஜலபதி கோவில் உதவி ஆணையர் குடியிருப்பு, மயிலாடுதுறை, துாத்துக்குடி, மதுரை உள்ளிட்ட, 13 இடங்களில் கட்டப்பட்ட ஆய்வாளர்கள் அலுவலகங்கள் என, 20 நிர்வாக கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத் தார்.
நிகழ் ச்சியில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

