ADDED : ஜூன் 05, 2026 02:51 AM
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'பார்மாக் சவுத்' என்ற தேசிய மருந்தியல் மாநாடு மற்றும் கண்காட்சி நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்த, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் ராஜிவ்சிங் ரகுவன்ஷி பேசியதாவது:
'வி க்சித் பாரத்' எனப்படும் வளர்ச்சிடையந்த இந்தியா என்ற திட்டத்தின்படி, மருந்து வர்த்தகத்தில், 2047ம் ஆண்டுக்குள், 40.05 லட்சம் கோடி ரூபாய் இலக்கை, இந்தியா எட்டும்.
இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டதால், உஸ்பெகிஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில், சில குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இத்தகைய நிகழ்வுகளை தவிர்க்க, மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை, வரும் ஆண்டுகளில், மூன்று கட்டங்களாக, கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை செய்ய உள்ளது. அதன்படி, மருந்து உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை ஒழுங்கு முறைப்படுத்த, 1,500 புதிய பணியிடங்களை உருவாக்க, கொள்கை அளவில் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
