ADDED : ஆக 01, 2025 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வினோத்குமார், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்; நேற்று அவர் பதவி ஏற்றார்.
உயர் நீதிமன்ற புதிய கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, புதிய நீதிபதி டி.வினோத்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 56 ஆக உயர்ந்துள்ளது; காலி பணியிடங்கள் எண்ணிக்கை, 19.

