வர்த்தகம் செய்யாமல் இருக்க 'ஜீரோதா'வில் புதிய வாய்ப்பு
வர்த்தகம் செய்யாமல் இருக்க 'ஜீரோதா'வில் புதிய வாய்ப்பு
ADDED : நவ 26, 2025 12:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்கு வர்த்தகத்தில் இழந்த பணத்தை எப்படியாவது மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவேசத்தில், சிலர் அதிகப்படியான வர்த்தகம் செய்வதுண்டு. இதை தடுப்பதற்காக, 'கில் ஸ்விட்ச்' எனும் ஒரு வசதியை, பங்கு தரகு நிறுவனமான 'ஜீரோதா' அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இதன் தலைமை நிர்வாக அதிகாரியான நிதின் காமத் தெரிவித்துள்ளதாவது:
ஜீரோதாவின் வர்த்தக தளமான 'கைட்'டில் உள்ள 'கில் ஸ்விட்ச் ' எனும் வசதியை தேர்ந்தெடுத்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வர்த்தக பிரிவுகளில், குறிப்பிட்ட நேரத்திற்கு வர்த்தகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்படும். அதிகப்படியான வர்த்தகம் செய்வது பொதுவான தவறுகளில் ஒன்று. சில சூழல்களில், எந்த வர்த்தகத்தையும் செய்யாமல் இருப்பதே சிறந்த வர்த்தகம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

