டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ஓய்வுக்கு பின் புதிய பதவி?
டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு ஓய்வுக்கு பின் புதிய பதவி?
ADDED : ஆக 25, 2025 01:15 AM

சென்னை: இம்மாதம் ஓய்வு பெற உள்ள, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆணையத்தின் தலைவராக நியமிக்க, அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையின் படைத்தலைவர் மற்றும் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.,யாக சங்கர் ஜிவால், 2023 ஜூன், 30ம் தேதி பொறுப்பேற்றார்.
இவரது பதவிக்காலம், வரும், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதற்கான கோப்பில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டு உள்ளார்.
ஓய்வுக்கு பின், சங்கர் ஜிவால், தமிழக காவல் துறையின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று, கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழக அரசு, தீயணைப்பு துறையில் சீர்திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளது. அதற்காக தீயணைப்பு துறை ஆணையம் ஒன்றை உருவாக்க உள்ளது. அதன் தலைவராக, சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளார்.
அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என, கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.