சினைப்பை புற்றுநோய் கண்டறிய புதிய திட்டம் அப்பல்லோவில் துவக்கம்
சினைப்பை புற்றுநோய் கண்டறிய புதிய திட்டம் அப்பல்லோவில் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 11:48 PM
சென்னை:சினைப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய, 'எண்டு - ஓ செக்' என்ற புதிய திட்டத்தை, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவமனையின் சென்னை தலைமை செயல் அதிகாரி கரண் பூரி கூறியதாவது:
பெண்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான செயல் திட்டத்தின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம். இதற்காக, அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம் இணைந்து, 'எண்டு - ஓ செக்' என்ற செயல் திட்டத்தை துவக்கி உள்ளன. இதன் வாயிலாக, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் பாதிப்பு அதிகம் இருப்பதால், அவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் சினைப்பை, பிறப்புறுப்புகள் சார்ந்த புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிவதால் உயிர் வாழ்வது, 90 சதவீதமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.