ADDED : ஜூலை 24, 2024 01:40 PM

சென்னை: ஆகஸ்ட் மாதம் முதல் புது ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் 2, 24,13,920 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு செப்.,15ம் தேதி தமிழகம் முழுதும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு துவக்கியது. இத்திட்டம் துவங்குவதற்கு முன்பாகவே புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியது.
இதனால், புது ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2,81,000 பயனாளிகள் காத்திருக்கின்றனர். புது ரேஷன் கார்டுகள் மீதான பரிசீலனை நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், புதிய ரேஷன் கார்டு வழங்க முடியாத நிலை நீடித்தது.
இந்நிலையில், அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.