தமிழ் வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் தமிழ் வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள்
தமிழ் வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் தமிழ் வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள்
ADDED : ஜூலை 12, 2023 01:22 AM
சென்னை:தமிழ் கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி, எழுத்தாக்கம் பெற்றபோது முதலில் தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளாகவும், பின், வட்டெழுத்து, கிரந்த எழுத்து, தற்கால எழுத்துகளாகவும் உருமாறி பயன்படுத்தப்பட்டுள்ளது.
கி.பி., 3 முதல் 10ம் நுாற்றாண்டு வரை பரவலாக தமிழகத்திலும், தற்போதைய கேரளாவிலும் வழக்கத்தில் இருந்தது, வட்டெழுத்து முறை.
இவற்றை, கல்வெட்டு ஆய்வாளர்களால் மட்டுமே படிக்க முடியும் என்பதால், பல கல்வெட்டுகள் பாமரர்களால் அழிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் வீணாகி உள்ளன.
மீதமுள்ள கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளில், வட்டெழுத்து கல்வெட்டின் புகைப்படத்தை பதிவேற்றினால், அதில் உள்ள எழுத்துருக்களை, தற்கால தமிழ் எழுத்து வடிவில் மாற்றி தந்துவிடும்.
சென்னை, அண்ணா பல்கலை உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளில், இரண்டு வகை எழுத்துருக்களை அடையாளம் காணும் வகையில், 'சிவகாசி, வேள்விக்குடி வட்டெழுத்து படிப்பான்' என பெயரிடப்பட்டுள்ளது.
இது, ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கப்பட உள்ளது.

