தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 109 ரயில்களுக்கு புதிய நிறுத்தம்

 109 ரயில்களுக்கு புதிய நிறுத்தம்

 109 ரயில்களுக்கு புதிய நிறுத்தம்


ADDED : ஜன 23, 2026 03:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 03:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: எழும்பூர் - கன்னியாகுமரி ரயில் உட்பட, 109 விரைவு ரயில்களுக்கு, கூடுதல் நிறுத்தம் வழங்கி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அறிக்கை:

ரயில் பயணி யரின் கோரிக்கையை ஏற்று, கூடுதல் நிறுத்தங்களுக்கு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

எழும்பூர் - கன்னியாகுமரி விரைவு ரயில் கோவில்பட்டியிலும், கோவை - சென்ட்ரல் ரயிலுக்கு திருவள்ளூரிலும், கர்நாடகா மாநிலம் மங்களூரு - சென்ட்ரல், திருவனந்தபுரம் - சென்ட்ரல் ரயில்கள் பெரம்பூரிலும், தலா இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும்.

இதேபோல், மொத்தம் 109 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. புதிய நிறுத்தம் வரும் 26ம் தேதி முதல் அமலாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us