விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் 1ம் தேதி முதல் புதிய கட்டணம்
விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் 1ம் தேதி முதல் புதிய கட்டணம்
ADDED : ஆக 30, 2025 07:03 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வரும், செப்.1ம் தேதி முதல் பழைய சுங்க வரியில் சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சுங்க கட்டணத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் ஆண்டுதோறும் செப்.1 முதல் நகாய் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
திண்டிவனத்திலிருந்து உளுந்துார்பேட்டை செங்குறிச்சி வரை, 74 கிலோ மீட்டர் துாரத்திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை, உளுந்துார்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிட்., நிர்வகித்து வருகிறது. நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு அமல் செய்யப்பட்ட சுங்க கட்டண விவரம்: (அடைப்பு குறிக்குள் கடந்தாண்டு வசூல் செய்யப்பட்ட கட்டண விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது)
கார், ஜீப்,பயணிகள் வேன் ஆகியவற்றிக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105 (ரூ.105); பல முறை பயணிக்க ரூ.160 (ரூ.155 ); மாதாந்திர கட்டணம் ரூ. 3170 ( ரூ. 3,100); இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180); பல முறை பயணிக்க ரூ.275 (ரூ. 270 ); மாதாந்திர கட்டணம் ரூ. 5,545 (ரூ.5,420): டிரக் ,பேருந்து ஒரு வழி கட்டணம் ரூ. 370(ரூ.360) பல முறை பயணிக்க ரூ. 555(ரூ.540 ) மாதாந்திர கட்டணம் ரூ. 11,085 (ரூ.10,845); பல அச்சு வாகனம் இரு அச்சுகளுக்கு மேல் ஒரு வழி கட்டணம் ரூ. 595 (ரூ.580 ) பல முறை பயணிக்க ரூ.890 (ரூ. 870) மாதாந்திர கட்டணம் ரூ. 17,820 (ரூ.17, 425), பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ.1000 (ரூ. 1000), உள்ளூர் வாகன கட்டணம் வகை 1 மாதாந்திர பாஸ் ரூ. 150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ. 300 என மாற்றமின்றி வசூலிக்கப்பட உள்ளது.
இந்த புதிய கட்டண உயர்வில் சிறிய மாற்றம் மட்டும் செய்து மாதாந்திர கட்டணத்தில் சற்று உயர்த்தி உள்ளதால் வாகன ஓட்டிகளிடம் நிம்மதி ஏற்பட்டுள்ளது.

