புத்தாண்டு கொண்டாட்டம்; இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சி கூடாது; சென்னை மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
புத்தாண்டு கொண்டாட்டம்; இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சி கூடாது; சென்னை மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
ADDED : டிச 21, 2024 02:10 PM

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர்., சாலை பகுதிகளில், இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் வரும் ஜன., 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை போலீசார் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:
* புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர்., சாலை பகுதிகளில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது.
* டிச., 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் அனுமதிக்கக் கூடாது; ஹோட்டல்களில் சி.சி.டி.வி., செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தனியார் ஹோட்டல்களில் அடையாள அட்டை வழங்காதவர்களுக்கு அறை கொடுக்கக் கூடாது; கடற்கரை ரிசார்ட்டில் தங்குவோர் இரவு 12 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது.
* வாழ்த்து சொல்வது போல் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீசார் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.