ADDED : ஜூன் 09, 2025 02:15 AM
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரில் இரு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த புதுமணத்தம்பதி போட்டி போட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
திருப்புவனம் குயவன் கோயில் தெருவைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி வினோத் குமார் 22. இவருக்கு சொட்டதட்டியைச் சேர்ந்த பவித்ரா 18, என்பவரை திருமணத்திற்காக பெண் பார்த்துள்ளனர்.
ஜாதக பொருத்தம் இல்லாததால் இரு வீட்டாரும் நிராகரித்து விட்டனர். ஆனால் வினோத் குமாரும் பவித்ராவிற்கும் பிடித்து போனதால் இருவரும் இரு வீட்டாருக்கும் தெரியாமல் இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
வினோத்குமார் வீட்டு மாடியில் அவர்கள் வசித்து வந்தனர்.
பெற்றோர் திட்டியதால் வினோத் குமார் கோபத்தில் விஷம் அருந்தியுள்ளார். பவித்ராவும் விஷத்தை பறித்து குடித்துள்ளார். இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

