ADDED : ஜன 23, 2025 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த 35 மீனவர்கள், 3 விசைப்படகுகளில், கடந்த ஆக., மாதம் மீன்பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த டிச., 8ம் தேதி ராமநாதபுரம் அக்கா மடத்தை சேர்ந்த, ஆறு மீனவர்களை கைது செய்தது.
அவர்களை விடுவிக்க கோரி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டு, கொழும்பில் இருந்து விமானத்தில், நேற்றுமுன்தினம் இரவு சென்னை திரும்பினர்.

