ADDED : ஜன 28, 2025 10:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், சென்னை புழல் உட்பட 30 சிறைகளில், 6.50 கோடி ரூபாயில், 160 'வீடியோ கான்பரன்ஸ்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சிறைகளில் உள்ள கைதிகளை, நேரடியாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தாமல், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யவும், வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்தவும் முடியும். சென்னை எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலகத்திலும், வீடியோ கான்பரன்சிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

