ADDED : ஜூன் 09, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளநிலை ஆராய்ச்சியாளருக்கான உதவித்தொகை பெறுவது, உதவிப் பேராசிரியராக பணி செய்வது, பி.எச்டி., சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பது போன்றவற்றுக்காக, ஆண்டுக்கு இரண்டு முறை, 'நெட்' தேர்வு, யு.ஜி.சி.,யால் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், வரும், 25 முதல், 29ம் தேதி வரை, காலை 9:00 முதல் பகல், 12:00 மணி வரை ஒரு அமர்வாகவும், மாலை, 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, மற்றொரு அமர்வாகவும் 'நெட்' தேர்வுகள் நடைபெற உள்ளன. தேர்வுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன் நுழைவுச்சீட்டு வெளியாகும்.

