ADDED : ஜூலை 17, 2025 11:23 PM
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி முடித்து, தமிழக பணிக்கு வந்துள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர், பல்வேறு மாவட்டங்களில், துணை கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.
பள்ளிக்கல்வி துறையால் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட செயல் திட்டங்கள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவற்றை ஆராய, மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருவையாறு கவின் கலை கல்லுாரிகள், மாமல்லபுரம் சிற்பக்கல்லுாரி மற்றும் மாவட்ட இசைப்பள்ளிகள், தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் என, 25 இடங்களில் நாட்டுப்புற கலைகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர, இன்று முதல், 'www.artandculture.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

