ADDED : அக் 15, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இ.சி.ஜி., டயாலிசிஸ், ஆப்பரேஷன் தியேட்டர் மற்றும் மயக்கவியல் டெக்னீசியன்கள் போன்ற மருத்துவ சான்றிதழ் படிப்புகளில், 143 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர்.
இதற்கு தகுதி வாய்ந்தவர்கள், வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் நேரடியாகவும் வந்து சேரலாம். 17 வயதை நிறைவு செய்திருப்பதுடன், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான பயிற்சி கட்டணம், 1,450 ரூபாய் மட்டுமே.