ADDED : அக் 18, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான கூட்டத்தை, அரசு துறை செயலர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும், துறை தலைமை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்ட வேண்டும்; அதன் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி வழங்கப்படுகிறது. அதன்படி, 499 பேருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 9,000 மற்றும் டிப்ளமா படித்தவர்களுக்கு 8,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இந்த பயிற்சியை பெற விரும்புவோர், www.boat-srp.com என்ற இணையதளத்தில் நாளை மறுதினத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.

