ADDED : டிச 18, 2024 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் மின் நுகர்வு தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. கோடை வெயிலால் கடந்த ஏப்ரல், 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. கனமழை, 'பெஞ்சல்' புயல் காரணமாக இம்மாதம், 1ம் தேதி மின் நுகர்வு, 23.47 கோடி யூனிட்களாக குறைந்தது.
இதுவே, இந்த ஆண்டில் இதுவரை பதிவானதில் குறைந்த மின் நுகர்வாகும். இதற்கு முன், ஓராண்டின் குறைந்தபட்ச மின் நுகர்வு, 2021ல் நவ., 4ம் தேதி, 18.69 கோடி; 2022 அக்., 24ம் தேதி, 20.67 கோடி; 2023 நவ., 12ல், 21.73 கோடி யூனிட்களாக இருந்தது.

