ADDED : ஆக 18, 2014 12:55 AM

தமிழகத்தில் பாரம்பரிய மிக்க தொழில்களாக விளங்குவது சிறுதொழில்கள் தான். மாநிலம் முழுவதும் 7 லட்சத்து 58 ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் உள்ளன.
தொழிற்சாலை வளர்ச்சியில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. சென்னையை சுற்றியே இன்ஜினியரிங் உட்பட பல பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு தொழிற்சாலைகளை வருவதற்கு அரசும் முயற்சிகள் எடுப்பதில்லை. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் சொல்லும் அளவிற்கு பெரிய தொழிற்சாலைகள் இல்லை.பெரிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி முதல் ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. பெரிய தொழிற்சாலைகள் அமைந்தால்தான் அதை நம்பி உதிரி பாகங்கள் செய்யக்கூடிய சிறிய தொழிற்சாலைகள் வளரும். இதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.மத்திய அமைச்சராக ஆர்.வெங்கட்டராமன், சி.சுப்ரமணியன் இருந்த போது, திருச்சி, ஒசூரில் பெரிய தொழிற்சாலைகள் துவக்கப்பட்டது. மதுரை, துாத்துக்குடியில் விமான நிலையங்கள் உள்ளன. இதனால் பிற்படுத்தப்பட்ட பகுதியில்தொழிற்சாலைகளை துவங்கலாம்.
45 சதவீதம் மூடல்:
இதையும் மீறி 'ரெகுலர்' கோர்ட்டிற்கு சிறுதொழில் நிறுவனங்கள் நஷ்டஈடு கேட்டு சென்றால், சம்பந்தப்பட்ட பெரிய தொழிற்சாலைகள், கோர்ட்டிற்கு சென்ற சிறு தொழிற்சாலைகளிடம் 'ஆர்டர்' கொடுப்பதில்லை.சிறு தொழிற்சாலைகளிடம் உற்பத்தி பொருட்களை வாங்கும் பெரிய தொழிற்சாலைகள், பொருளுக்கு உரிய பணத்தை 45 நாட்களுக்குள் தர வேண்டும். ஆனால் பெரிய தொழிற்சாலைகள் அதுமாதிரி தராமல், ஓராண்டுகள் இழுத்தடிக்கிறது. இது சிறு தொழிற்சாலைகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது.
மானியம் தேவையில்லை:
சிறு தொழில் உற்பத்தி பொருட்களை வாங்கி அரசு மார்க்கெட்டிங் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
முற்றுரிமை போட்டி:
சிறு தொழிற்சாலைகள் மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது. பித்தளை, இரும்பு, ரப்பர், ஈயம் உட்பட பல மூலப்பொருட்களுக்கு ஒரு சிலர் மட்டுமே முற்றுரிமையாளராக உள்ளனர். இவர்கள் வைத்ததுதான் விலை. சிமென்ட் விலை மாதிரி அவர்கள் இஷ்டம் போல் விலைகளை உயர்த்திக் கொள்கின்றனர். ஆனால் சிறுதொழில்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு ஒரே விலையைத்தான் நிர்ணயிக்கின்றனர். குறிப்பாக ஒரு இரும்புராடு ரூ.100 என்றால், எவ்வளவுதான் மூலப்பொருள் விலை உயர்ந்தாலும், அதே விலைக்குத்தான் சிறுதொழில் உற்பத்தியை வாங்கி கொள்வார்கள். இதனாலும் சிறுதொழில்கள் நசுக்கப்படுகிறது.
அரசு கட்டுப்பாடு தேவை:
-- கே.ஆர்.தங்கராஜ்,
தமிழ்நாடு சிறு மற்றும்
குறுந்தொழில் சங்க மாநில முன்னாள் தலைவர்,
திண்டுக்கல்.
மொபைல்: 99944 57569.
