தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஒரே தொட்டியில் காய்கறி, பூச்செடிகள் வளர்ப்பு : 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டிகள் அறிமுகம்

ஒரே தொட்டியில் காய்கறி, பூச்செடிகள் வளர்ப்பு : 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டிகள் அறிமுகம்

ஒரே தொட்டியில் காய்கறி, பூச்செடிகள் வளர்ப்பு : 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டிகள் அறிமுகம்


ADDED : ஜூன் 25, 2015 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2015 01:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: வீடுகளில் காய்கறி தேவையை பூர்த்தி செய்ய வீட்டுகாலி இடங்களில் தோட்டம் அமைப்பது, மாடி வீட்டு தோட்டம் அமைப்பது பிரபலமாகி வருகிறது.

நகரங்களில் இடநெருக்கடியால் காலியிடம் இன்றி வீடுகட்டுவோர் ஒரே தொட்டியில் காய்கறி, பழச்செடி, பூச்செடிகள் வளர்த்து பயன்பெற தேனி மாவட்டம் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டிகள் உருவாக்கி வழிகாட்டி உள்ளனர். பிளாஸ்டிக் தொட்டியில் போதிய இடைவெளியோடு பல இடங்களில் துளையிடப்படுகிறது. தொட்டியின் மையத்தில் துளைகள் இடப்பட்ட பிளாஸ்டிக் பைப்பை நிறுத்தி, தொட்டியை சுற்றி மண், இயற்கை உரம் அடுக்கடுக்காக 75 சதவீத அளவிற்கு நிரப்புகின்றனர். இடை, இடையே மண்புழுக்களை விடவேண்டும். அதன்பின் தொட்டியில் உள்ள ஒவ்வொரு துளையிலும் நாம் விரும்பும் செடிகளை நட்டு வளர்க்கலாம். ஒரு துளையில் காய்கறி செடி, அடுத்த துளையில் பூச்செடி, அடுத்து பழச்செடி என வித விதமான செடிகளை நட்டு வளர்க்கலாம்.தேனி மாவட்ட பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் கருப்பையா கூறியதாவது:தொட்டியின் மைய பைப்பில் நீர் ஊற்றினால் கசிந்து, கசிந்து தொட்டி முழுவதும் உள்ள செடிகள் வளர நீர் கிடைக்கும். மேலும் வீட்டில் சேரும் காய்கறி கழிவுகளையும் துண்டு, துண்டுகளாக வெட்டி தொட்டியில் போட்டால் அவைகளும் மக்கி நீருடன் கலந்து நல்ல உரம் கிடைக்கும். இதன் மூலம் வீட்டின் கழிவுகள் வீதிக்கு வருவதை தடுக்கும் நோக்கில் 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டி உருவாக்கி உள்ளோம். இதே போல் காம்பவுண்ட் சுவர்களின் மீது பூச்செடிகள் வளர்க்கலாம். வீடுகளில் எளிமையாக வளர்த்து பயன்பெறலாம். அதோடு ஒரே தொட்டியில் காய்களும், பூக்களும் பூத்தால் அழகுகிற்கு அழகு சேர்க்கும். இதற்கு ஏற்பட்ட வரவேற்பால் சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் அலுவலகத்தில் அமைத்துள்ளோம். அதிகபட்சம் ஒரு தொட்டி அமைக்க ரூ.1300 செலவாகும். ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கலாம், என்றார். தேனி கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு செய்து 'ஹோம் கம்போஸ்ட்' தொட்டிகளை அமைத்த அதிகாரிகளை பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us