UPDATED : மே 09, 2016 01:01 AM
ADDED : மே 08, 2016 11:45 PM

சென்னை: 'தேர்தலுக்கு பின், நிலக்கரி ஊழல் பற்றி விசாரணை கமிஷன் அமைக்கும்போது, பதில் சொல்லி தான் ஆக வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
@Image@மின் வாரியத்திற்காக, நிலக்கரி வாங்குவதில், எந்த அளவுக்கு ஊழலும், முறைகேடுகளும்
@nextcolumn@ நடைபெற்றன என விரிவாக, நான் தெரிவித்ததற்கு, எந்த விதமான பதிலும் முதல்வரிட மிருந்தோ, அமைச்சரிடமிருந்தோ வரவில்லை. இப்போது சொல்லாவிட்டாலும்,தேர்தலுக்கு பின், இந்த ஊழல்கள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்து கேட்கும்போது, பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பது குறித்து, அ.தி.மு.க., அரசு மறு, 'டெண்டர்' கோரியது. அதுபற்றிய வழக்கில், உயர் நீதிமன்றநீதிபதி சத்யநாராயணா, புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும் வரை, புதிய டெண்டர் விடக் கூடாதுஎன்றும்நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலை யில், உடன்குடி அனல் மின் நிலையம்
@nextcolumn@அமைக்க, இரண்டாவது முறையாக டெண்டர் கோரப்பட்டது சரியா; யாரை ஏமாற்ற, இந்த இரண்டாவது டெண்டர்?.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
