அ.தி.மு.க., பாணியில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிடுகிறது தி.மு.க.,
அ.தி.மு.க., பாணியில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிடுகிறது தி.மு.க.,
ADDED : ஜூன் 02, 2016 12:54 AM
அ.தி.மு.க., பாணியில், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிட்டு, கணிசமான இடங்களை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அக்., 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
25-ம் தேதி, புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்க வேண்டும். எனவே, அதற்கு முன் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டங்களையும், அ.தி.மு.க., தரப்பில் நடத்த துவங்கி விட்டனர்.அ.தி.மு.க.,வை தொடர்ந்து, மற்ற கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து யோசிக்க துவங்கி உள்ளன. சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில், சிறிய கட்சிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அந்த கட்சியினரும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அதே பார்முலாவில், உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்க, அ.தி.மு.க., திட்டமிட்டு உள்ளது.பெண்களுக்கு உள்ளாட்சியில், 50 சதவீத பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என, அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டு உள்ளதால், அதற்கேற்ப வேட்பாளர்கள் தேர்வு இருக்கும் என, அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.இந்நிலையில், அ.தி.மு.க., பாணியிலேயே, தி.மு.க.,வும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க, திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான், 'உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி கூடாது' என, கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில், நிர்வாகிகள் சிலர் பேசியதாக கூறப்படுகிறது. தி.மு.க., தலைமையும், இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது.சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அணியில், சிறிய கட்சிகள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அந்த கட்சியினரும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர்.வட்ட, பகுதி செயலர்களுக்கு 'செக்!'தி.மு.க., ஆளுங்கட்சியாக இல்லாத நிலையில், உள்ளாட்சி தேர்தலில், கட்சி சார்பில் போட்டியிட விரும்பாமல், 'ஜகா' வாங்கும் வட்ட செயலர்கள் மற்றும் பகுதி செயலர்களின் பட்டியலை எடுத்து, அவர்களிடம் உள்ள கட்சி பொறுப்பை பறிக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டு உள்ளது. எனவே, இம்முறை போட்டியில் இருந்து, பகுதி மற்றும் வட்ட செயலர்கள் தப்பிக்க வாய்ப்பில்லை என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது நிருபர் -
