தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜெ., சமாதியில் பட்ஜெட்!

ஜெ., சமாதியில் பட்ஜெட்!

ஜெ., சமாதியில் பட்ஜெட்!


ADDED : மார் 16, 2017 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2017 09:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, : நிதி அமைச்சர் ஜெயக்குமார், காலையில், ஜெ., நினைவிடம் சென்று, பட்ஜெட் அறிக்கையை, சமாதி மீது வைத்து வணங்கினார்.

நிதி அமைச்சர் ஜெயக்குமார், நேற்று முதன் முதலாக, 2017 - 18ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் சட்டசபைக்கு வருவதற்கு முன், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, ஜெ., நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு பட்ஜெட் அறிக்கை வைக்கப்பட்ட சூட்கேசை, சமாதி மீது வைத்து வணங்கினார்; மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின், சட்டசபைக்கு வந்தார். அதேபோல, முதல்வர் பழனிசாமியும், ஜெ., நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய பின், சட்டசபைக்கு வந்தார்.

சட்டசபை உள்ளே, 10:21 மணிக்கு, முதல்வரும், அமைச்சர் ஜெயக்குமாரும், பட்ஜெட் பெட்டியுடன் நுழைந்தனர். ஆளும் கட்சியினர் மேஜையை தட்டி வரவேற்றனர். ஜெயக்குமார் மனைவி, சபை மாடத்தில் அமர்ந்து, தன் கணவர் பட்ஜெட் உரை வாசிப்பதை பார்த்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us