84 லட்சம் பேருக்கு வேலை இல்லை; முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி
84 லட்சம் பேருக்கு வேலை இல்லை; முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி
UPDATED : மே 09, 2017 08:31 AM
ADDED : மே 07, 2017 10:39 PM

சென்னை: 'தமிழகத்தில், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலையின்றி காத்தி ருக்கின்றனர்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், முதல்வர் பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
'அ.தி.மு.க., அரசு, ஒரு லட்சம் பேருக்கு வேலை பெற்றுத் தந்துள்ளது' என, முதல்வர் பழனிசாமி பேசியிருப்பது, வேலையின்றி தவிக்கும் இளை ஞர்களுக்கு, வெந்த புண்ணில்,வேல் பாய்ச்சுவ தாக உள்ளது.6ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், இளைஞர்களுக்கு, எவ்வித வேலை வாய்ப்பை யும் உருவாக்காததால், 84 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், வேலை வாய்ப்பு @nextcolumn@அலுவலகங்களில், பதிவு செய்து விட்டு, எப்போது வேலைகிடைக்கும் என, காத்திருக்கின்றனர்.@Image@எனவே, விளம்பரத்துக்காக பேசுவதை தவிர்த்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் செயல்படுத்த, முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@nextcolumn@அரசு பணிகளில் உள்ள காலியிடங்களில், வெளிப்படை தன்மையுடன், பணி நியமனங் களை செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
