காங்., செயல் தலைவர் பதவி: பீட்டர், நக்மா, குஷ்பு போட்டி
காங்., செயல் தலைவர் பதவி: பீட்டர், நக்மா, குஷ்பு போட்டி
ADDED : மே 09, 2017 10:35 PM
சசிகலா ஆதர வாளர் என்ற புகார் காரணமாக, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசருக்கு, 'செக்' வைக்கும் விதமாக, செயல் தலைவரை நியமிக்க, அக்கட்சியின் டில்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, செயல் தலைவர் பதவியை பிடிக்க, பீட்டர் அல்போன்ஸ், நக்மா, குஷ்பு ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், தஞ்சாவூரில்,
சசிகலாவின் கணவர் நடராஜனை, திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். அப்போது, ஜனாதிபதி தேர்தலில், காங்கிரசுக்கு, அ.தி.மு.க., - சசிகலா அணி ஆதரவை பெறுவதற்கான பேச்சு நடத்தியதாக கூறப்படுகிறது.
டில்லியில் புகார் : இது, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தெரிய வந்ததும், திருநாவுக்கரசர் மீது, தன் கட்சி, எம்.பி., மூலமாக, டில்லியில் புகார் செய்தார். அதே போல், முன்னாள் தலைவர் இளங்கோவன், 'டிவி'க்கு அளித்த பேட்டியில், 'திருநாவுக்கரசர் செயல்பாடு சரியில்லை.ஊழல்வாதி என, நீதிமன்றத்தால் முத்திரை குத்தப்பட்ட சசிகலாவின் கணவரை, திருநாவுக்கரசர் சந்தித்தது, மிகப்பெரிய தவறு. இதை, காங்., தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள்' என்றார்.இந்நிலையில், சென்னை, வில்லிவாக்கத்தில் நடந்த, தி.மு.க., பொதுக்கூட்டத்திற்கு, திருநாவுக்கரசரை அழைக்கவில்லை. ஆனால், முன்னாள், எம்.பி., பீட்டர் அல்போன்சை அழைத்துள்ளனர். அக்கூட்டத்தில், கருணாநிதியை, பீட்டர் புகழ்ந்து பேசியதால், தி.மு.க., தொண்டர்கள் கை தட்டி வரவேற்றுள்ளனர். எனவே, லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழக காங்., தலைவர் பதவியை கைப்பற்ற, பீட்டருக்கு, தி.மு.க., துணை நிற்கும் என, தெரிகிறது.
தங்க முடிவு : அதே போல், அகில இந்திய மகளிர் காங்., தலைவர் நக்மாவும், தன் ஆதர
வாளர்களிடம், 'தமிழக அரசியலில், தீவிரமாக ஈடுபட தயாராகி வருகிறேன். சென்னையில் வீடு எடுத்து, நிரந்தரமாக தங்கவும் முடிவு செய்துள்ளேன்' என, கூறியுள்ளார்.
மேலும், காங்., செய்தித் தொடர்பாளர் குஷ்புவும், 'மாநில தலைவர் பதவி கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்' என, ஆதரவாளர்களிடம் கூறிஉள்ளார். இதற்கிடையில், திருநாவுக்கரசருக்கு, 'செக்' வைக்கும் வகையில், செயல் தலைவரை நியமிக்க, டில்லி மேலிடம் ஆலோசித்து
வருகிறது.
- நமது நிருபர் -
