சசிகலாவுக்கு சிறப்பு வசதி; உதவிய தமிழக பிரமுகர்கள்?
சசிகலாவுக்கு சிறப்பு வசதி; உதவிய தமிழக பிரமுகர்கள்?
UPDATED : ஜூலை 17, 2017 12:45 AM
ADDED : ஜூலை 16, 2017 11:12 PM

சசிகலாவுக்கு, பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் கிடைக்க, தமிழக காங்., பிரமுகர்கள் சிலர், திரைமறைவில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், காங்., துணைத் தலைவர் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார்.
@Image@சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலாவுக்கு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டதாகவும், அதற்கு, சிறைத் துறை உயர் அதிகாரிகள், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டினார்.
உத்தரவு
இது குறித்து விசாரணை நடத்த, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், தமிழக காங்., கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர், சசிகலா வுக்கு சிறையில், சிறப்பு வசதிகள் கிடைக்க@nextcolumn@ காரணமாக இருந்ததாகவும், அதற்காக, சிறை அதிகாரிகள் மற்றும் கர்நாடக மாநில
காங்., பிரமுகர்களை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், அம்மாநில
போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரம் கூறியதாவது: கர்நாடகாவில், விரைவில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நேரத்தில், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம், அம்மாநில முதல்வரான, சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசுக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, சிலர் தரப்பில் செய்யப்பட்ட பிரசாரம் உண்மையாக இருக்குமோ என, கர்நாடகாவில் வாழும், 4 சதவீத பிராமண சமுதாயத்தினரும், 3 சதவீத ஓட்டுகளை கொண்டுள்ள தமிழர்களும் நம்புகின்றனர்.
இந்த நேரத்தில், சசிகலா விவகாரம் எழுந்துள்ளது, காங்கிரஸ் மீதான அவர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. அந்த அதிருப்தியை சாதகமாக்கி, 7
சதவீத ஓட்டுகளையும் தங்கள் பக்கம் திருப்ப, கர்நாடக மாநில பா.ஜ., மற்றும்
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முற்பட்டு உள்ளன.
திரைமறைவு:
இதற்கிடையில்,சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் கிடைக்க, கர்நாடக மாநில காங்., பிரமுகர்கள்@nextcolumn@ மற்றும் சிறை அதிகாரிகளின் உதவியை, தமிழக காங்., பிரமுகர்கள் நாடியதாகவும், இது தொடர்பான திரைமறைவு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
அதனால், சசிகலாவுக்கு ரகசியமாக உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் குறித்து, விசாரணை நடத்த, கர்நாடக போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சசிகலாவுக்கு உதவிய, தமிழக காங்., பிரமுகர்கள் மீது, ராகுல் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.இவ்வாறு காங்., வட்டாரம் கூறியது.
- நமது நிருபர் -