தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சட்டசபையில் ஒரே நாளில் 8 சட்ட முன்வடிவு தாக்கல்

சட்டசபையில் ஒரே நாளில் 8 சட்ட முன்வடிவு தாக்கல்

சட்டசபையில் ஒரே நாளில் 8 சட்ட முன்வடிவு தாக்கல்


ADDED : ஜூலை 18, 2017 09:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2017 09:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நேற்று, எட்டு சட்ட முன்வடிவுகள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் விபரம்:

n தமிழ்நாடு மின் துாக்கிகள் சட்டம் - 1997ல், இயங்கும் படிக்கட்டுகளை நிறுவுதல், பராமரித்தல் மற்றும் பாதுகாப்பாக இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த, வழிவகை இல்லை. எனவே, அவற்றை சேர்ப்பதற்காக, சட்டத் திருத்தம் செய்தல்

n தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் - 1998ல், அரசு கொள்முதலில், ஒளிவு மறைவின்றி செயல்படுவதற்கும், ஒப்பந்த புள்ளிகளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும் இயற்றப்பட்டது. இதில், மின்னணு கொள்முதல் முறையை சேர்க்க வகை செய்தல்

n உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் சட்டம் - 2016ன், 34ம் பிரிவு, ஊனமுற்றோருக்கு அரசு நிறுவனங்களில், 4 சதவீதம் ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்கிறது. அதற்கேற்ப, தமிழக அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருதல்

n செயல்பாட்டில் இல்லாத, சில

சட்டங்களை நீக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழக அரசு தொடர்புடைய, 10 நிதி ஒதுக்கீட்டு சட்டங்களை நீக்குதல்

n தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை; தமிழ்நாடு வேளாண் பல்கலை; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்

பல்கலை ஆகியவற்றில் துணைவேந்தர் நியமனத்திற்காக, தனித்தனியே மூன்று சட்ட திருத்தம் கொண்டு வருதல்

n தமிழ்நாடு கடலோர பகுதியில், பாரம்பரிய மீனவர்களின் நலனை பாதுகாக்கவும், மீன்பிடித் தொழிலை முறைப்படுத்தவும், மீன் பிடி ஆதாரங்களை பாதுகாக்கவும், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைப்படுத்துதல் திருத்த சட்டம், 2017ல் கொண்டு வரப்பட்டது. இதில்

3 கடல் மைல் தொலை துாரம்

என்பது, 5 கடல் மைல் துாரம் என, மாற்றி அமைத்தல்

இந்த சட்ட முன்வடிவுகளும், ஏற்கனவே சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, பல்வேறு சட்ட முன்வடிவுகளும், இன்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது.

தமிழ்நாடு பொன்விழா - ஸ்டாலின் தகவல் : எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் நேற்று பேசியதாவது: இந்த மாநிலத்தின் பெயர் 'மதராஸ்' என அழைக்கப்பட்டது. இதை 'தமிழ்நாடு' என பெயர் மாற்ற இதே தேதியில் 1967ல் அண்ணாதுரை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட, பொன்விழா ஆண்டு தற்போது நடைபெறுகிறது. அதை இங்கு நினைவுப்படுத்துகிறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us