உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஜூலை 19, 2017 03:32 PM
அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2015- 16ல் போக்குவரத்து கழகங்கள் உட்பட அரசு நிறுவனங்கள் ரூ.2,824 கோடி நஷ்டத்தில் இயங்கியதாக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிகமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ரூ.499 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 17 நிறுவனங்கள் நஷ்டத்திலும், 22 நிறுவனங்கள் லாபத்திலும் இயங்குகின்றன.
நஷ்டம்:
கடந்த 2015 - 16ல் டாஸ்மாக் ரூ.125.64 கோடி நஷ்டத்தில் இயங்கியது. 2014- 15ல் ரூ.79.13 கோடி லாபத்தில் இயங்கியது. விற்பனை வளர்ச்சியில் டாஸ்மாக் நிறுவனம் முன்னணியில் உள்ளது. 2015-16 ல் டாஸ்மாக்கிற்கு ரூ.30,283 வருமானமும், 14-15ல் ரூ.27820கோடி வருமானமும் கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
