தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இடம் கிடைத்தால் மின் நிலையங்கள்

இடம் கிடைத்தால் மின் நிலையங்கள்

இடம் கிடைத்தால் மின் நிலையங்கள்


ADDED : ஜூலை 19, 2017 11:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2017 11:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ''இடம் கிடைத்தால், உடனடியாக துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவங்கும். இந்த ஆண்டில், 129 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்,'' என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: கொளத்துார் தொகுதியில், 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், சீரான மின்சாரம் வழங்க, 64வது வட்டம், நேர்மை நகரில், சோமசுந்தர சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 33 கிலோ வாட், துணை மின் நிலையம் அமைக்க கருத்துரு பெறப்பட்டது.

அந்த நிலத்தின் மீது வழக்கு நடந்து, 2015ல் முடிவுக்கு வந்தது. அந்த நிலத்திற்கு, 40.36 லட்சம் ரூபாய் செலுத்திய பிறகும், துணை மின் நிலைய பணி துவக்கப்படவில்லை.

அதேபோல, 65வது வார்டு கணேஷ் நகரில், 2009ல் எடுத்து கொள்ளப்பட்ட, துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவக்கப்படவில்லை.

சட்டசபை கூட்டத் தொடரில், பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் அறிவிக்கப்பட்ட துணை மின் நிலையங்கள், பல ஆண்டுகளாகியும் நிறுவப்படவில்லை என,

கூறியுள்ளனர்.முதல்வர், 110 விதியின் கீழ், 108 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என, அறிவித்தார்.அந்த அறிவிப்புகள், செயல்பாட்டிற்கு வர வேண்டும் என்றால், எந்தெந்தப் பகுதிகளில், துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறதோ, அங்கு அந்தப்பகுதியைச் சேர்ந்த, மேற்பார்வை பொறியாளரை நியமித்து, அவரிடம் பொறுப்புகளை வழங்க வேண்டும்.

அமைச்சர் தங்கமணி: கணேஷ் நகரில், ஒரு மாதத்தில், பணிகள் துவக்கப்படும். அதேபோல், நேர்மை நகரிலும் பணிகள் துவக்கப்படும். முதல்வர் அறிவித்த, 108 துணை மின் நிலையங்கள் உட்பட, 129 துணை மின் நிலையங்களை, நடப்பாண்டில் துவங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஸ்டாலின்: எல்.டி., மற்றும் எச்.டி., துணை வட கம்பி அமைப்பது குறித்து, ஏற்கனவே உறுதிமொழி தந்தீர்கள். ஆனால், போதிய அளவில் பில்லர் பாக்ஸ் இல்லாதது, கேபிள் இல்லாதது ஆகிய காரணங்களால், பணிகள் தடைபடுவதாக செய்திகள் வருகின்றன. அதை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.அமைச்சர் தங்கமணி: நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல காரணங்களால், பணி தாமதமாகிறது. 2,500 கி.மீ., உயர் மின் வழித்தடம், 33 ஆயிரத்து, 307 கி.மீ, தாழ்வழுத்த வழித்

தடம் அமைக்க வேண்டிஉள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us