தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/லாலு மகளுக்கு சிக்கல்

லாலு மகளுக்கு சிக்கல்

லாலு மகளுக்கு சிக்கல்


ADDED : ஜூலை 21, 2017 11:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2017 11:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மகளான, மிசா பார்தி தொடர்புடைய, 8,000 கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், அவரது, 'ஆடிட்டர்' ராஜேஷ் அகர்வால் மீது, அமலாக்கப் பிரிவு, நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு அமைந்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவர் உறவினர்கள் மீது, ஏற்கனவே, சி.பி.ஐ., ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து, 8,000 கோடி ரூபாய், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், லாலு பிரசாத்தின் மகள், மிசா பார்தி சிக்கி உள்ளார். இந்த வழக்கில், அவரது ஆடிட்டர் ராஜேஷ் அகர்வால் கைது செய்யப்பட்டார்.

ராஜேஷ் அகர்வால் மீது, டில்லி சிறப்பு கோர்ட்டில் நேற்று, அமலாக்கப் பிரிவு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், வரி ஏய்ப்பு செய்ய உதவியதுடன், சட்ட விரோதமான வழிகளில், பல கோடி ரூபாயை பரிமாற்றம் செய்ய, மிசா பார்திக்கு உதவியதாக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இதனால், மிசா பார்திக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us