தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா : 2,263 பேர் சான்றிதழ் பெற்றனர்

ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா : 2,263 பேர் சான்றிதழ் பெற்றனர்

ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா : 2,263 பேர் சான்றிதழ் பெற்றனர்


ADDED : ஜூலை 22, 2017 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2017 12:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை, ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில், 2,263 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

தேசிய உயர்கல்வி தொழிற்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யின், 54வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு தலைவரும், மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனருமான, பவன் கோயங்கா தலைமை வகித்தார். விழாவில், கல்லுாரி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, கல்லுாரியின் செயல்திறன் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.சிறப்பு விருந்தினராக, ஆதார் அட்டைக்கான ஆணைய முன்னாள் தலைவர், நந்தன் நிலேகனிபங்கேற்று பேசினார். விழாவில், 284 மாணவியர், 21 மாற்றுத்திறனாளிகள்

உட்பட, 2,263 பேர் பட்டம் பெற்றனர். அதிகபட்சமாக, 375 பேர், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றனர். எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ், 273; சிவில் இன்ஜி., 236; கம்யூ., சயின்ஸ் பிரிவில், 162 பேர் பட்டம் பெற்றனர்.விழாவில், சிறப்பிடத்துக்கான பரிசுகள், சின்மய் ஜா, விஷால் கட்டாரியா, வித்யா ராமசாமி, சஷ்வத் நிதின் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இது தவிர, 69 பேருக்கு, துறை ரீதியாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us