sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்

/

திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்

திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்

திவாகரன் - தினகரன் திடீர் கைகோர்ப்பு முதல்வர் பழனிசாமி அணியினர் கலக்கம்


UPDATED : ஜூலை 29, 2017 12:48 AM

ADDED : ஜூலை 28, 2017 11:14 PM

Google News

UPDATED : ஜூலை 29, 2017 12:48 AM ADDED : ஜூலை 28, 2017 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலியும், பூனையுமாக சமீபகாலம் வரை இருந்த, திவாகரனும், தினகரனும், திடீரென கை கோர்த்துக் கொண்டுள்ளது, முதல்வர் பழனி சாமி அணியினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

@Image@அ.தி.மு.க., பொதுச் செயலராக தன்னை அறிவித்துக் கொண்ட, சசிகலா சிறைக்கு சென்றதும், அவர் குடும்பத்தில், அதிகார போட்டி தலை துாக்கியது. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும், அக்கா மகன் தினகரனுக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டது. சசிகலா உதவியுடன், அ.தி.மு.க., துணை பொதுச்செயல ரான தினகரன், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்; திவாகரனை ஒதுக்கினார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் கைதானார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, திவாகரன், முதல்வர் தரப்பினருடன் இணைந்து, தினகரனை கட்சி யில் இருந்து ஓரம் கட்ட முயற்சித்தார். இரு வரும், எலியும், பூனையுமாக மாறினர். தினகரன் ஜாமினில் வெளியே வந்ததும், மீண்டும் கட்சியை கைப்பற்ற துடித்தார்.

தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையில் உள்ள மோதலை பயன்படுத்தி, சசிகலா குடும்பத்தினரை மொத்தமாக விலக்கி விட்டு, ஆட்சியையும், கட்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர, முதல்வர் பழனிசாமி முடிவு செய் தார்.அதற்கு, அமைச்சர்கள்ஒத்துழைத்தனர்.@nextcolumn@ தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த, எம்.எல்.ஏ.,க்க ளும், முதல்வர் பக்கம் சாய்ந்தனர். இதே நிலை நீடித்தால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கையை விட்டு போய்விடும் என்பதை, சசிகலா தரப் பினர் உணர்ந்தனர். எனவே, இணைந்து செயல்பட முடிவு செய்தனர்.

நேற்று முன்தினம், சசிகலாவின் அண்ணன் சுந்தர வதனத்தின் மனைவி சந்தானலட்சுமி, சென்னை யில் காலமானார்.அவரது உடல், இறுதி சடங்கிற் காக, தஞ்சாவூர், காந்தி நகரில் உள்ள, அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. சந்தான லட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் அனு ராதாவை, தினகரன் திருமணம் செய்துள்ளார்; மகன், டாக்டர் வெங்கடேஷ். நேற்று காலை, துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுடன், தினகரன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, திவாகரன் அங்கு சென்றார்; தினகரன் அருகே அமர்ந்தார். இருவரும், நெருக்கமாக பேசிய படி இருந்தனர். இருவரும் இணைந்தே, பத்திரிகை யாளர்களை சந்தித்தனர். எலியும், பூனையுமாக இருந்த இருவரும் கைகோர்த்துக் கொண்டது, அவர்களின் ஆதரவாளர்களிடம், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம், முதல்வர் பழனிசாமி தரப்பினரிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத் தினரை, மீண்டும் கட்சியில் அதிகாரம் செலுத்த அனுமதித்தால், அவர்கள் மீது வெறுப்பில் உள்ள, சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், ஏற்கனவே, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமர் மோடியின் பேராதரவுடன் உள்ள, பன்னீர் அணிக்கு தாவ வாய்ப்புள்ளது.

சசிகலாகுடும்பத்தை முற்றிலும் ஒதுக்கினால், அவர்களுக்கு ஆதரவாக சில, எம்.எல்.ஏ.,க்கள்

கொடி பிடிப்பர். இவர்களை எப்படி சமாளிப்பது என, முதல்வர் பழனி சாமி ஆதரவு அமைச்சர்கள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை, திவாகரன் ஆதரவாளர்களாக இருந்த அமைச்சர் களும்,எம்.எல்.ஏ.,க்களும், திவாகரனோடு, கோர்த் துள்ளதால்,தங்களுக்கு தினகரன் கைசிக்கல் @nextcolumn@ ஏற்படுமோ என்றும் கலக்கம் அடைந்துள்ளனர்.

சக்கர வியூகத்தில் அ.தி.மு.க.,


தஞ்சையில், திவாகரன் நிருபர்களிடம் கூறிய தாவது: துக்க நிகழ்வுக்கு யார் வேண்டு மானாலும் வரலாம்; வராமலும் போகலாம்; இதை அரசிய லாக்க வேண்டாம். யாருக்கும் எந்தவிதமான, அரசியல் நெருக்கடியும் கிடை யாது. பதவி வேறு; ஆட்சி வேறு. அ.தி.மு.க., வுக்கு, தற்போது சோதனையான கால கட்டம். சக்கர வியூகத் தில் மாட்டிய அபிமன்யு போல, கட்சி சிக்கி தவிக்கிறது; அதை எப்படியும் மீட்டெடுப்போம்.

எனக்கும், தினகரனுக்கும், எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. எங்களுக்குள் பிரச்னையே இல்லாத போது, நடராஜன் எப்படி பிரச்னையை தீர்த்து வைக்க முடியும்? பழனி சாமி நல்ல முறையில் ஆட்சிசெய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன் கூறுகையில், ''துக்க வீட்டில் அரசி யல் பேச விரும்பவில்லை. ஒரு சிலர் நேரில் வருகின்றனர்; சிலர், போன் மூலம், துக்கம் தெரிவிக்கின்றனர். அமைச்சர்கள் வராததை, அரசியலாக்க வேண்டாம். அ.தி.மு.க.,வில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத் திருந்து பாருங்கள்,'' என்றார்.






      Dinamalar
      Follow us