தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கட்சியை பலப்படுத்த தினகரன் சுற்றுப்பயணம்

கட்சியை பலப்படுத்த தினகரன் சுற்றுப்பயணம்

கட்சியை பலப்படுத்த தினகரன் சுற்றுப்பயணம்


ADDED : ஆக 01, 2017 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2017 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ''லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்காக, தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்,'' என, தினகரன் கூறினார்.

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர், செயல்பட முடியாத நிலையில் உள்ளார். இதுபோன்ற சூழலில், அவரால், துணை பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட எனக்கே, பொதுச்செயலருக்கான அதிகாரங்கள் உள்ளன. கட்சியின் தொண்டனாக, துணைப் பொதுச் செயலராக, தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். இரு அணிகளும் இணைய, கால அவகாசம் அளித்ததில், எந்தவித முன்னேற்றமும் இல்லை. கட்சியின் துணை பொதுச் செயலர் என்ற முறையில், கட்சிக்கு கடமையாற்ற வேண்டி உள்ளது. இரண்டு மாதங்களாக, தொண்டர்கள் அடிக்கடி, என்னை வந்து சந்தித்து செல்கின்றனர். அவர்கள் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற, கட்சியை பலப்படுத்த உள்ளேன். மக்களை பெரிதும் பாதிக்கும், காஸ் மானியம் ரத்து, ரேஷன் பொருட்கள் நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அதற்கு மாநில அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி, மத்திய அரசு மூலம், தமிழகத்திற்கான திட்டங்களை, மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்.

நடிகர் கமல், ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும். அவர், மக்களால் மிகவும் மதிக்கப்படுபவர். அவரது குற்றச்சாட்டுகளை அமைதியாக கேட்டு, அமைச்சர்கள் அரசியல் ரீதியாக அணுக வேண்டும். கட்சியை பலப்படுத்துவதில், பிரிந்து போனவர்களை சேர்ப்பதும் அடங்கும். அவர்கள் பயத்தினால், என்னை ஒதுங்கி இருக்கும்படி கூறினர்; அது, எனக்கு தெரியும். இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள்; வரும், 4ல், என் சுற்றுப்பயண திட்டத்தை அறிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us