உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 01, 2017 09:19 PM

அ நிறம் | அளவு
நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன், திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாகர்கோவில் நகராட்சி, 25-வது வார்டில் உள்ள, ஹனிபா நகரில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சாலைப் பணி மேற்கொள்ள, ஏழு லட்சம் ரூபாயை, சுரேஷ்ராஜன் ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்காக, கடந்த மாதம் டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் ஒருவருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ஒரு மாதம் ஆகியும், பணிகள் தொடங்காததால், வேறு ஒப்பந்ததாரருக்கு பணியை வழங்க வேண்டும் என, சுரேஷ்ராஜன் கடிதம் கொடுத்தார். ஆனால், நேற்று காலை, பழைய ஒப்பந்ததாரரே, வேலையை துவங்கினார். இதையடுத்து, நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற சுரேஷ்ராஜன், அங்கு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் பேச்சுக்கு பின், அவர் போராட்டத்தை கைவிட்டார்.
