தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கட்சிக்கும், ஆட்சிக்கும் பழனிசாமியே தலைமை : அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

கட்சிக்கும், ஆட்சிக்கும் பழனிசாமியே தலைமை : அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

கட்சிக்கும், ஆட்சிக்கும் பழனிசாமியே தலைமை : அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்


ADDED : ஆக 01, 2017 10:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2017 10:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ''முதல்வர் பழனிசாமி தலைமையில், கட்சியும், ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. மற்றவர்களை பற்றி கவலைப்படுவதாக இல்லை,'' என, அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் : இதன்பின், ஜெயகுமார் கூறியதாவது: 'எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, எழுச்சியோடு கொண்டாடப்பட வேண்டும்' என்ற, ஜெ., கனவை நிறைவேற்றும் விதமாக, முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திலும், விழாவை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

முதல்வர், தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் விரும்புவது, 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பது தான். நாங்கள் அனைவரும், ஒருமித்த கருத்தோடு, 'யாரையும் விடக்கூடாது; அரவணைத்து செல்ல வேண்டும்' என்ற, மனப்பாங்கோடு செயல்படுகிறோம். பன்னீர் அணியுடன், பேச்சு நடத்த கதவு திறந்தே உள்ளது. பேச்சு நடந்து வருகிறது; சுமுக தீர்வு விரைவில் எட்டப்படும். அப்போது, உங்கள் அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் தெளிவாக உள்ளோம். எம்.ஜி.ஆர்., துவங்கிய, அ.தி.மு.க.,வை, ஜெ., எக்கு கோட்டையாக உருவாக்கினார். அதே கட்டுக்கோப்போடு, முதல்வர் பழனிசாமி தலைமையில், கட்சியும், ஆட்சியும் சென்று கொண்டிருக்கிறது. மற்றவர்களை பற்றி, நாங்கள் கவலைப்படுவதாக இல்லை.

இணக்கம் : முன், தி.மு.க., மண்டியிட்டு, மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருந்தது. அப்போது, தமிழகத்தின் உரிமைகளை இழந்தோம். தி.மு.க.,வால் இழந்த உரிமையை, ஜெ., மீட்டார்; அவர் வழியில் செயல்படுகிறோம். மத்திய அரசு, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதற்கு நிதியை பெற்று, தமிழகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என, செயல்படுகிறோம். தமிழகம் வந்த, மத்திய நிதியமைச்சரிடம், 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கோரி, மனு கொடுத்தோம். தமிழக மக்களுக்கு உதவி செய்வதற்காக, மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us