கொள்ளையடிப்பது அமைச்சர் பணியா : பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
கொள்ளையடிப்பது அமைச்சர் பணியா : பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
ADDED : ஆக 21, 2017 12:08 AM

மதுரை: ''பதவியை பயன்படுத்தி கொள்ளையடிப்பது தான் அமைச்சர்களின் பணியா?'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: 'மத்திய அமைச்சர்கள், அரசு வாகனங்களை சொந்த விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டாம். ஆடம்பரமாக செயல்பட வேண்டாம்' என பிரதமர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வாழ்ந்து காட்டக்கூடியவர்; அரசியல்வாதிகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் அவர். பதவியை பயன்படுத்தி கொள்ளையடிப்பது தான் அமைச்சர்களின் பணியா?பத்ம விருதுகளுக்கு 'ஆன் லைன்' மூலம் பதிவு செய்து மக்களே தேர்வு செய்வதை வரவேற்கிறேன்.அ.தி.மு.க., அணிகள் இணைவதுமகிழ்ச்சி. பிரதமரின் தலையீட்டால் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் விடுவிக்கப்பட்டன.
தமிழகத்தில் பா.ஜ., வை முதல்நிலை கட்சியாக கொண்டுவருவதே எங்கள் நோக்கம். அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் எங்களுக்கு கை கொடுக்கும். அவரது வருகைக்கு பின், தமிழகத்தில் எங்கள் கை ஓங்கும், என்றார்.
