தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இணைந்தன ! ஓ.பி.எஸ்., - எடப்பாடி அணிகள் .,

இணைந்தன ! ஓ.பி.எஸ்., - எடப்பாடி அணிகள் .,

இணைந்தன ! ஓ.பி.எஸ்., - எடப்பாடி அணிகள் .,


UPDATED : ஆக 21, 2017 07:44 PM

ADDED : ஆக 21, 2017 02:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 21, 2017 07:44 PM ADDED : ஆக 21, 2017 02:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அ.தி.மு.க., இரு அணிகள் இணைவது தொடர்பான முடிவை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.,சும் இணைந்து அதிமுக., தலைமை அலுவலகத்தில் அமர்ந்தனர். இருவரும் கை குலுக்கி வரவேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள ஜெ., நினைவிடத்திற்கு சென்று இருவரும் ஜெ., சமாதியில் மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுகவை வழிநடத்தும் வழிகாட்டும் குழு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டன.195 நாட்களுக்கு@Image@@nextcolumn@ பின்னர் இரு அணிகள் இணைந்தன. கடந்த பிப் 7 ம்தேதி ஜெ., நினைவிடத்தில் அதிமுக அணி ஓபி.எஸ்., தியானம் மூலம் இரண்டாக உடைந்தது. அன்று முதல் தர்மயுத்தம் துவங்குவதாக ஓ.பி.எஸ்., அறிவித்தார். தொடர்ந்து அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என பிரிந்ததது.தற்போது இரு அணிகள் இணைந்திருப்பதால் ஒன்றுபட்ட அதிமுகவாக மாறுகிறது. இதன்மூலம் கட்சியின் இரட்டை இலை சின்னம் மீட்கப்படும். இரு அணிகள் இணைவது தொடர்பை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகம், ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். அவரை தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

@nextcolumn@

பாரம் குறைந்து விட்டது; ஓ.பி.எஸ்.,கட்சி நிவாகிகள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், எங்களை யாரும் பிரிக்க முடியாது. நாம் அனைவரும் ஜெயலலிதாவின் ஒரு தாய் மக்கள். இணைப்பிற்கு முழு ஒத்துழைப்பு தந்த முதல்வர் பழனிசாமி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளுக்கும் எனது நன்றி. இனி வரும் காலங்களில் அனைவரும் ஒன்றாக இருந்து, ஆண்ட கட்சியே மீண்டும் ஆளும் புதிய சரித்திரத்தை உருவாக்கிய ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. கருத்து வேறுபாடுகள் நீங்கி விட்டன. இந்த இணைப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றார்.

கனவுகள் தகர்ந்து விட்டன;

ஓ.பி.எஸ்., முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்; ஜெயலலிதா ஆத்மா நிறைவேறும் வகையில் நாம் இணைந்துள்ளோம். 6 மாத காலமாக நாம் பல கஷ்டங்களை சந்தித்துள்ளோம். இந்த இயக்கம் இணைவதற்கு அரும்பாடு பட்ட ஓ.பி.எஸ்., மற்றும் அனைவரது சார்பிலும் அவரது எண்ணத்தை நிறைவேற்றும் விதமாக ஒன்றுபட்ட அதிமுக தழைத்து நிற்க ஜெ., எம்.ஜி.ஆர்., கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். பலரது கனவுகள் தகர்ந்து விட்டன. இந்தியாவிலேயே பிரிந்த எந்த கட்சியும் இணைந்தது இல்லை. ஆனால் பிரிந்த அதிமுக மட்டுமே இணைந்துள்ளது என்றார். மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பளராக கே.பி.முனுசாமியும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us